Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.25,000 கோடிக்கு அரசு பத்திரங்களை விற்க ஆர்பிஐ திட்டம்

ரூ.25,000 கோடிக்கு அரசு பத்திரங்களை விற்க ஆர்பிஐ திட்டம்

இந்தப் பத்திர விற்பனை மூலம் வங்கிகளிடமிருந்து பணம் ரிசர்வ் வங்கிக்குச் செல்லும்.

பகிரவும் WhatsApp Facebook

வங்கிகளிடம் உள்ள உபரி பணப் புழக்கத்தைக் குறைக்கும் வகையில், ரூ.25,000 கோடி மதிப்பிலான அரசுப் பத்திரங்களை சந்தையில் நேரடியாக விற்பனை செய்ய ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற நிதிக்கொள்கை கூட்டத்தில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டியை 0.25 சதவீதம் உயர்த்தியதுடன், பணவீக்கத்தை பொறுத்து எதிர்காலத்திலும் வட்டி உயர்வு தொடர வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வரும் 13-ம் தேதி ரூ.25,000 கோடி மதிப்பிலான அரசுப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்ய உள்ளது. 2030 முதல் 2035 வரையிலான நிதியாண்டுகளில் முதிர்ச்சியடையும் பல்வேறு அரசுப் பத்திரங்களை விற்பனை செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

இந்தப் பத்திர விற்பனை மூலம் வங்கிகளிடமிருந்து பணம் ரிசர்வ் வங்கிக்குச் செல்லும். இதனால் வங்கித் துறையில் புழக்கத்தில் உள்ள உபரிப் பணத்தின் அளவு குறையும்.
மேலும், வங்கிகள் தங்களது வைப்புத்தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ரிசர்வ் வங்கியிடம் ரொக்க இருப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே ரொக்க இருப்பு விகிதம் (CRR) எனப்படுகிறது.தற்போது வங்கிகள் தினசரி அடிப்படையில் பராமரிக்க வேண்டிய சிஆர்ஆர் அளவு, நிர்ணயிக்கப்பட்ட இருப்பில் 90 சதவீதமாக உள்ளது. இந்த அளவை அக்டோபர் 16 முதல் 99 சதவீதமாக உயர்த்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 

இதனால், வங்கிகள் தங்களிடம் உள்ள பணத்தை கடன் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு அதிகரிக்கும். சிஆர்ஆர் அடிப்படையில் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்கும் தொகைக்கு வங்கிகள் வட்டி வருவாய் பெறுவதில்லை. முன்னதாக, கடந்த மாதம் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான அரசுப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்தது. 

கடந்த பத்தாண்டுகளில் பதிவான மிக அதிகபட்ச பத்திர விற்பனையாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் 1 முதல் இந்திய வங்கிகளிடம் உபரி பணப்புழக்கம், தினசரி சராசரியாக ரூ.7 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது வங்கிகளின் மொத்த வைப்புத்தொகையில் சுமார் 2.6 சதவீதமாகும். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வரும் காலாண்டுகளில் இந்த உபரிப் பணப்புழக்கம், மொத்த வைப்புத்தொகையில் 1 சதவீதத்துக்கும் கீழாகக் குறையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
36 லட்சம் டன் எம்-சாண்ட் உற்பத்தி செய்ய என்எல்சிக்கு அனுமதி
அடுத்த செய்தி
அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் - ரூ.50 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிப்பு

தொடர்புடைய செய்திகள்